Home One Line P1 கோலா கங்சார் அரண்மனையில் நோன்பு திறப்பு விழா இரத்து!

கோலா கங்சார் அரண்மனையில் நோன்பு திறப்பு விழா இரத்து!

523
0
SHARE
Ad

ஈப்போ: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோலா காங்சார் அரண்மனையில் நோன்பு திறப்பு விழா இவ்வருடம் நடத்தப்படாது என்று சுல்தான் நஸ்ரின் ஷா அறிவித்துள்ளார்.

நாட்டு தலைவர்கள் முதலில் இந்த கட்டுப்பாட்டை மதித்து மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் நீண்ட கால நல்வாழ்வுக்காக இந்த தியாகத்தை செய்ய வேண்டியுள்ளதாகவும் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“நடமாட்டக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதன் மூலம் மக்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைக்க தலைமை மட்டத்தில் உள்ளவர்களை அவர் அழைத்துள்ளார்” என்று பேராக் அரண்மனை மேலாளர் டத்தோ அப்துல் ராகிம் முகமட் நோர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சுல்தான் நஸ்ரின் ஷா தம்பதியினர் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்க மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும் சிரமங்களையும் அறிந்திருக்கிறார்கள், புரிந்துகொண்டுள்ளார்கள்.” என்று அப்துல் ராகிம் கூறினார்.

ரம்லானுடன் இணைந்து, கொவிட்-19 நோயாளிகளைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னணி பணியாளர்களின் அனைத்து முயற்சிகளையும் புரிந்து கொள்ளவும், பாராட்டவும், உதவவும் முஸ்லிம்களுக்கு சுல்தான் நஸ்ரின் அறிவுறுத்தினார் என்று அப்துல் ராகிம் கூறினார்.