Home One Line P1 ஏப்ரல் 23 முதல் குறிப்பிட்ட சேவைகளுடன் வருமான வரித் துறை செயல்பாடுகளைத் தொடங்குகிறது!

ஏப்ரல் 23 முதல் குறிப்பிட்ட சேவைகளுடன் வருமான வரித் துறை செயல்பாடுகளைத் தொடங்குகிறது!

390
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: வருமான வரி சேவை மையம் மற்றும் நகர்ப்புற மாற்ற மையம் தவிர, அனைத்து உள்நாட்டு வருமான வரித் துறை வளாகங்களும் இன்று (ஏப்ரல் 23) முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 28-ஆம் தேதியுடன் முடிவடையும் வரை வரையறுக்கப்பட்ட சேவைகளை அது வழங்கும்.

கொவிட்-19 நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, இணைய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வருமான வரித் துறை  தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“ஈ- பைலிங் சேவை மற்றும் பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்) முகப்புகள் திறக்கப்படவில்லை. எந்தவொரு ஈ-பைலிங் புதிய விண்ணப்பங்கள் மற்றும் பிபிஎன் முறையீடுகள் இணையம் மூலம் செய்யப்படலாம்” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வருமான வரித் துறை அலுவலகத்திற்கு வெளியே வரி விவரம் மற்றும் சேவை முகப்பிடங்களை திறப்பதும் மேலதிக அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.