Home One Line P1 12 அறிகுறி இல்லாத நேர்மறை நோயாளிகள் மாயெப்ஸ் மையத்தில் உள்ளனர்!

12 அறிகுறி இல்லாத நேர்மறை நோயாளிகள் மாயெப்ஸ் மையத்தில் உள்ளனர்!

324
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை தொடங்கி மாயெப்ஸ் (MAEPS),கொவிட்-19 தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சை மையத்தில் 12 அறிகுறி அல்லாத நேர்மறை நோயாளிகள் இருப்பதாக தனிமைப்படுத்தும் மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அதன் இயக்குனர் டாக்டர் முகமட் அனுவார் அப்துல் சாமாட் மஹ்முட் கூறுகையில், குறைந்த ஆபத்துள்ள நோயாளிகளுக்கு மட்டுமே  இங்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும்,  இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் ஏப்ரல் 21 முதல் கொவிட்-19 நேர்மறை நோயாளிகளைப் பெறத் தொடங்கினோம். மேலும் மருத்துவமனையின் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் மேலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.”

#TamilSchoolmychoice

“இங்கே சேர்க்கப்படுபவர்கள் அறிகுறிகள் இல்லாதவர்கள்  மற்றும் குறைந்த ஆபத்தில் உள்ள நோயாளிகள்” என்று அவர் கூறினார்.

“தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகள் எங்களிடம் இல்லை, எங்களுக்கு குறைந்த கொவிட் -19 சேர்க்கைத் தேவைகள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்” என்று அவர் கூறினார்.