Home One Line P1 கொவிட் -19: 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு அறிகுறிகள் இல்லை!

கொவிட் -19: 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு அறிகுறிகள் இல்லை!

382
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நேர்மறை நோயாளிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாது அல்லது இலேசான அறிகுறிகளுடன் இருந்தாலும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“சில வெளிநாட்டு நாடுகளைப் போலில்லாமல், நாம் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்க்கிறோம். அங்கு அவர்களது வீடுகளில் மட்டுமே தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.”

“ஆரம்பக்கால கொவிட் -19 நேர்மறை சம்பவங்களை கண்டறிந்தால், நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், நாங்கள் அவர்களை கண்காணிப்போம்.”

#TamilSchoolmychoice

“வகை ஒன்றுக்கு அறிகுறிகள் இல்லை மற்றும் வகை இரண்டு இலேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளது” என்று அவர் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

வகை மூன்று நிமோனியா நோயாளி, ஆனால் சுவாசக் கருவித் தேவையில்லை, வகை நான்கு நிமோனியா நோயாளியாக இருந்து, சுவாசக் கருவி தேவைப்படுவது. வகை ஐந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவி உதவி தேவைப்படுவது என்று அவர் கூறினார்.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவின் சிலாங்கூர் மென்ஷனில் 22 புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக ஹிஷாம் தெரிவித்தார். இதுவரையிலும் மொத்தம் 107 சம்பவங்கள் அங்கு பதிவாகி உள்ளன.

உலு லங்காட்டில் உள்ள கம்போங் சுங்கை லூயில் 10 புதிய சம்பவங்கள் உள்ளன.

புதிய தொற்றுநோய்கள் இல்லாததால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெர்லிஸ் மாநிலத்தை ஹிஷாம் பச்சை மண்டலத்திற்கு திரும்பிய முதல் மாநிலம் என்று அறிவித்தார்.