Home One Line P2 கொவிட்-19: உலகளவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 190,000-ஐ நெருங்கியது!

கொவிட்-19: உலகளவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 190,000-ஐ நெருங்கியது!

376
0
SHARE
Ad

வாஷிங்டன்: இன்று வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கொவிட்-19 தொற்று நோயால் உலகளவில் 190,000 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

24 மணி நேரத்திற்குள் சுமார் 5,000 இறப்புகள் அதிகரித்துள்ளன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, நான்கு நாடுகள் இப்போது 20,000- க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.

#TamilSchoolmychoice

அமெரிக்கா அதிக இறப்பு எண்ணிக்கையைக் கொண்ட நாடாகவும், கிட்டத்தட்ட 50,000 பேர் இதுவரையிலும் அந்நாட்டில் இறந்துள்ளனர்.

அமெரிக்காவில் 49,759 இறப்புகள் பதிவாகியுள்ளன. 24 மணி நேரத்திற்குள் 1,000- க்கும் மேற்பட்ட இறப்புகள் அங்கு அதிகரித்துள்ளன.

இதைத் தொடர்ந்து இத்தாலியில் 400- க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 25,500-க்கும் மேற்பட்ட இறப்புகள் அங்கு பதிவாகி உள்ளன.

457 பேர் ஸ்பெயினில் உயிரிந்துள்ளனர். இதன் விளைவாக மொத்தம் 22,157 பேர் அங்கு உயிரிழந்தனர்.

இதற்கிடையில், பிரான்சில் மொத்தம் 21,856 இறப்புகளும், இங்கிலாந்தில் 18,738 இறப்புகளும் பதிவாகி உள்ளன.