Home One Line P1 கொவிட்-19 ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட நச்சுயிர் அல்ல!- உலக சுகாதார நிறுவனம்

கொவிட்-19 ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட நச்சுயிர் அல்ல!- உலக சுகாதார நிறுவனம்

436
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட்-19 தொற்றுநோய் பாதிப்புக்கான காரணம் உலகளவில் விஞ்ஞானிகளிடையே இன்னும் ஒரு விவாதமாக உள்ளது.

இந்த நச்சுயிர் எங்கிருந்து தோன்றியது என்பது பற்றிய பல சதி கோட்பாடுகளும் உள்ளன.

வுஹான் நகரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஓர் உயிர் பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து இது உருவாகிறது என்ற குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும். இது வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என அழைக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இருப்பினும், உலக சுகாதார நிறுவனம் இது ஓர் ஆய்வக அடிப்படையிலான தயாரிப்பு என்று கூறப்படுவதை முற்றிலும் நிராகரிக்கிறது.

“தற்போதைய ஆய்வின் அனைத்து ஆதாரங்களும் இது விலங்குகளிடமிருந்து வந்திருக்கக்கூடும் என்பதையும், அது ஆய்வகத்தில் அல்லது எந்தவொரு அறியப்படாத இடத்திலிருந்தும் கையாளப்பட்டதா அல்லது தயாரிக்கப்பட்டதா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் பாடெலா சாய்ப் கூறினார்.

இதற்கிடையில், அறிவியலின் தற்போதைய ஒருமித்த கருத்துக்கு ஏற்ப, இந்த நச்சுயிர் வெளவால்களிலிருந்து வந்ததாக சாய்ப் வலியுறுத்தினார்.

“பல ஆராய்ச்சியாளர்கள் கொவிட்-19 வைரஸின் மரபணு அம்சங்களை வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர், ஆனால் எந்த கண்டுபிடிப்புகளும் ஆய்வக அடிப்படையிலானவை என்று கண்டறியப்படவில்லை,” என்று அவர் கூறினார்.