Home One Line P1 கொவிட்-19 பாதிப்பால் மலேசிய மருத்துவர் இங்கிலாந்தில் காலமானார்!

கொவிட்-19 பாதிப்பால் மலேசிய மருத்துவர் இங்கிலாந்தில் காலமானார்!

479
0
SHARE
Ad

இங்கிலாந்து: இங்கிலாந்து பர்மிங்காம் மகளிர் மருத்துவமனையில் பணிபுரியும் மலேசிய மருத்துவர் டாக்டர். ஆர். விஷ்னா, கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை பர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது. மரணமுற்ற மருத்துவர் விஷ் என அழைக்கப்படுவார் என்றும், மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் தலைமை நிர்வாகி சாரா-ஜேன் மார்ஷ், விஷ் மிகவும் திறமையான மருத்துவர் என்றும் அவரது சகாக்களால் நேசிக்கப்பட்டவர் என்றும் வர்ணித்தார்.

#TamilSchoolmychoice

“இறந்தவர் குழந்தை மற்றும் அவர்களது குடும்பங்களை பராமரிப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தவர்.”

“விஷின் மரணம் ஓர் எதிர்பாராத நிகழ்வு மற்றும் அவரது மனைவி, மகள் மற்றும் குழந்தைகள் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”

“நம்முடைய கடந்த கால மதிப்புகள் ஒவ்வொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வை மற்றும் துணிச்சல் அனைத்தும் தொடர்ந்து நம் இதயங்களில் நடப்படும். கடவுள் விஷை ஆசீர்வதிப்பாராக, நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என்று அவர் கூறினார்.