Home One Line P1 மலாக்கா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் மாநில முதலமைச்சர் நியமனம்!

மலாக்கா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் மாநில முதலமைச்சர் நியமனம்!

572
0
SHARE
Ad

மலாக்கா: மலாக்காவில், மலாக்கா முன்னாள் முதலமைச்சரை நம்பிக்கைக் கூட்டணி மாநில எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது.

புக்கிட் கட்டில் சட்டமன்ற உறுப்பினருமான அட்லி சாஹாரி மலாக்கா மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், 11 சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற காணொளி அமர்வின் மூலம் ஏகமனதாக இந்த நியமனத்தை ஒப்புக் கொண்டதாக அறிவித்தது.

#TamilSchoolmychoice

“மலாக்கா சட்டமன்றத்தின் 14-வது முதல் அமர்வு மற்றும் மூன்றாம் அமர்வு, மே 11 அன்று ஒரு நாளுக்கு நடைபெறும். பிப்ரவரியில் நடந்த அரசியல் நெருக்கடி மற்றும் அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு நடக்கும் முதல் மாநில சட்டமன்றக் கூட்டம் இதுவாகும், ”என்று அது கூறியது.

குறிப்பாக கொவிட் -19 பாதித்ததை அடுத்து, மலாக்கா நம்பிக்கைக் கூட்டணி மக்களுக்கும் அரசுக்கும் சேவை செய்வதில் உறுதியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.