Home One Line P1 அபிப் பகாருடின் பிகேஆர் கட்சியிலிருந்து இடைநீக்கம்

அபிப் பகாருடின் பிகேஆர் கட்சியிலிருந்து இடைநீக்கம்

419
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பிகேஆர் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பகாருடின் அந்தக் கட்சியிலிருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

பினாங்கு, செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான அபிப் பகாருடின் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை பிகேஆர் கட்சி தொடங்கியுள்ளது. அந்த ஒழுங்கு நடவடிக்கை மீதான முடிவுகள் வரும் வரையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பான கடிதம் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) தனக்குக் கிடைத்ததாகவும் அபிப் பகாருடின் தெரிவித்திருக்கிறார். இவர் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த அஸ்மின் அலியின் தீவிர ஆதரவாளராக நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்தார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, பிகேஆர் கட்சியின் மகளிர் தலைவி ஹனிசா தல்ஹாவும் இதே போன்ற ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கி, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.