Home உலகம் சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 931 ஆக உயர்ந்தது

சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 931 ஆக உயர்ந்தது

467
0
SHARE
Ad

சிங்கப்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) வரை ஒரு நாளில் 931 புதிய கொவிட் 19 தொற்றுகள் கண்டிருப்பதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,624 ஆக உயர்ந்திருக்கிறது.

நேற்று 618 ஆகக் குறைந்திருந்த புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று மீண்டும் ஆயிரத்தை நெருங்கும் அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

வழக்கம்போல் பாதிக்கப்பட்டவர்களில் சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கையில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்களில் 15 பேர்களுக்கு மட்டுமே கொவிட்-19 தொற்று கண்டிருக்கிறது. எஞ்சியவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.