Home One Line P1 பிகேஆரை விட்டு வெளியேற அபிப் தம்மை அழைத்ததாக பிரபாகரன் அறிக்கை!

பிகேஆரை விட்டு வெளியேற அபிப் தம்மை அழைத்ததாக பிரபாகரன் அறிக்கை!

702
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இடைநீக்கம் செய்யப்பட்ட பெர்மாத்தாங் பாவு பிகேஆர் தலைவர் அபிப் பகாருடின் தம்மை கட்சியை விட்டு வெளியேற அழைத்ததை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

கெராகானுடன் இணைய அபிப் அளித்த வாய்ப்பை நிராகரித்ததாக பிரபாகரன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பிகேஆருக்கு விசுவாசமாக இருப்பேன் என்று பிரபாகரனும் ஒரு தனி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பேராக் மாநில பிகேஆர் தலைவர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாராக் கூறியபடி தமக்கும் டாக்டர் அபிபுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.

“எனது நிலைப்பாடும் கொள்கைகளும் நீதிக் கொள்கைகளுக்கு சமமானவை என்பதை தெளிவுபடுத்துவதற்காக, அரசியல் பிரச்சனைகள் குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. மக்களுடன் எனது போராட்டத்தைத் தொடர்வதற்காக நான் நீதியுடன் இருப்பேன்.”

இது குறித்து அபிப்பிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, அக்​​குற்றச்சாட்டுகளை ஏற்க அபிப் மறுத்து விட்டார்.

“இந்த கடினமான நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது எனது கவனம் எனது அங்கத்தினர்களிடமே உள்ளது” என்று செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான அபிப் கூறினார்.

“எல்லாம் அரசியல், எல்லோரும் நான் கட்சித் தாவ வேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்று பிரபாகரன் கூறினார்.

‘அருவருப்பான அரசியல்’ நிறுத்தப்பட வேண்டும் என்றும், 15-வது பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாகவும் பிரபாகரன் கூறினார்.