Home One Line P2 கொவிட்-19: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் 3 மில்லியனை எட்டியது!

கொவிட்-19: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் 3 மில்லியனை எட்டியது!

652
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகெங்கிலும் உள்ள கொவிட்-19 நேர்மறையான சம்பவங்கள் திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி 2.96 மில்லியனாக பதிவாகியுள்ளன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி 24 மணி நேரத்திற்குள் 70,000- க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகக் காட்டுகிறது. ஏழு நாடுகளில் இப்போது 100,000- க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது மற்றும் ஒட்டுமொத்த நேர்மறை சம்பவங்கள் இப்போது 961,000 ஆகும்.

#TamilSchoolmychoice

ஸ்பெயின் மற்றும் இத்தாலி முறையே 226,000 மற்றும் 197,000 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.

அதிக நேர்மறையான சம்பவங்களைக் கொண்ட நான்காவது மற்றும் ஐந்தாவது நாடுகளில் முறையே 161,000 மற்றும் 157,000 சம்பவங்கள் உள்ளன.

பிரிட்டன் மற்றும் துருக்கியில், முறையே 154,000 மற்றும் 110,000 நேர்மறைசம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றிலிருந்து மீண்டு வந்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது உலகளவில் 861,000- க்கும் அதிகமாக உள்ளது.