Home One Line P1 உணவுக் கூடைகள் எதிர்க்கட்சியினருக்கு வந்து சேரவில்லை! – குலசேகரன்

உணவுக் கூடைகள் எதிர்க்கட்சியினருக்கு வந்து சேரவில்லை! – குலசேகரன்

605
0
SHARE
Ad

ஈப்போ: ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், தனது பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு சமூக நலத்துறை வழங்கிய உணவுக் கூடைகள், அம்னோ, பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உணவு வழங்கல் உண்மையில் இலக்கு குழுவை அடைந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் கூறினார்.

“இந்த கட்சிகள் ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது உண்மைதான்.”

#TamilSchoolmychoice

“மிக முக்கியமாக, இந்த அத்தியாவசிய பொருட்கள் ஏன் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று நாங்கள் கேட்கிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 1000 வீடுகளுக்கு உணவு கூடைகள் மற்றும் அத்தியாவசியங்களை சமூக நலத்துறை மூலம் பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது.

எதிர்க்கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில், இந்த விநியோகம் சீரற்றதாக இருப்பதாகக் கூறப்பட்டது.

ஏப்ரல் 13-ஆம் தேதி, மலேசியாகினி, ஒவ்வொரு தொகுதியின் பிரதிநிதிகளையும் தொடர்புகொண்டு உணவு கூடை பெறுபவர்களின் பெயர்களின் பட்டியலை வழங்கக் கேட்டதாகவும், இருப்பினும், சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கூடை கிடைக்கவில்லை என்று கூறியதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

விநியோக செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று குலசேகரன் கூறினார்.