Home One Line P1 கொவிட்-19: போரிஸ் ஜோன்சன் பணிக்குத் திரும்பினார் !

கொவிட்-19: போரிஸ் ஜோன்சன் பணிக்குத் திரும்பினார் !

521
0
SHARE
Ad

இங்கிலாந்து: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் திங்களன்று கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீள்வதற்கான மூன்று வார சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

ஜோன்சன் மருத்துவமனையில் ஒரு வாரம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரண்டு வாரங்கள் இருந்தார்.

இருப்பினும், ஜோன்சனின் தற்போதைய நிலையை வெளிப்படுத்த மாநில செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

ஜோன்சன் பணியைத் தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும், சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்கை சந்திப்பார் என்றும், மேலும் திங்களன்று கொவிட்-19- இல் தினசரி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறப்படுகிறது.

தனது வேலையைத் தொடங்கிய பிறகு, நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கை குறைந்து வருவதால் ஜோன்சன் தடையை தளர்த்தலாமா என்ற கேள்வியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாத இறுதியில் ஜோன்சன் கொவிட் -19 நோயிக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டார். ஏப்ரல் 5-ஆம் தேதி செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அதற்கு அடுத்த நாள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.