மாநில நகர நல்வாழ்வு, வீட்டுவசதி, ஊராட்சி மற்றும் புதிய கிராமக் குழுத் தலைவர் தியோ கோக் சியோங் கூறுகையில், இன்று காலை 8 மணி முதல் மேடான் நியாகா பஹாவில் நடைபெற்ற நேர்காணலின் விளைவாக, பாதிக்கப்பட்ட வணிகரின் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த ஒரு மையத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு பாஹாவ் சுகாதார மருந்தகத்தில் பரிசோதனை செய்ய அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
பாஹாவ் சந்தை உட்பட, அருகிலுள்ள கடைகளும், மேடான் நியாகா அலுவலகம், சுகாதார அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் 14 நாட்களுக்கு மூடப்படும் என்று அவர் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, பாஹாவ் சந்தையில் ஒரு வணிகர், செலாயாங் மொத்த விற்பனை மையத்திற்கு சென்றபின் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.