Home One Line P2 கேரளாவில் கூடல் இடைவெளியை அனுபவிக்க குடைகள் வழங்கப்படுகிறது!

கேரளாவில் கூடல் இடைவெளியை அனுபவிக்க குடைகள் வழங்கப்படுகிறது!

761
0
SHARE
Ad

கொச்சி: கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் கூடல் இடைவெளியை அனுபவிக்கவும், வீட்டிலேயே இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு, மூகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளைத் தவிர, கொரொனா தொற்றுநோயைத் தடுக்க குடைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த தனித்துவமான யோசனை கேரளாவில் உள்ள தன்னீர்முக்கோம் கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இது அம்மாநில நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக்கின் முன்முயற்சியாகும்.

#TamilSchoolmychoice

குடை திறக்கப்படும் போது, ​​மற்றவர்கள் குடையிலிருந்து ஒரு மீட்டர் தூரத்திலாவது தங்களைத் தூர விலக்கிக்கொள்ள இது கட்டாயப்படுத்தும் என்று அவர் கூறினார்.

கூட்டுறவு கடைகளில் குடைகளை விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் மானியம் அளிக்கிறது மற்றும் அதை வாங்க முடியாதவர்களுக்கு படிப்படியாக கட்டணம் செலுத்தும் திட்டத்தை வழங்குகிறது.

மேலும், மொத்தம் 12,000 குடைகள் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

கேரளாவில் கொவிட் -19 பரவுவதைத் தடுக்கும் நுட்பம் அனைத்துலக ஊடகங்களின் பரவலான பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

சீனாவின் வுஹானில் இருந்து ஒரு மருத்துவ மாணவர் திரும்பியபோது ஜனவரி 30-ஆம் தேதி அம்மாநிலத்தில் முதல் கொரொனா சம்பவம் கண்டறியப்பட்டது.