Home உலகம் தமிழ் நடிகர்களுக்கு எதிராக போராட்டம்- சிங்கள நடிகை அறிவிப்பு

தமிழ் நடிகர்களுக்கு எதிராக போராட்டம்- சிங்கள நடிகை அறிவிப்பு

825
0
SHARE
Ad

maliniகொழும்பு, ஏப்ரல் 11- இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ராஜபக்சேவுக்கு எதிராகவும் தமிழ் நடிகர்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சிங்கள நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ் நடிகர்களுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று சிங்கள நடிகை மாலினி பொன்சேகா (படம்) அறிவித்துள்ளார். இவர் சிவாஜி கணேசனுடன் பைலட் பிரேம்நாத் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல சிங்களர்கள் நடத்தும் ராவணாசக்தி என்ற அமைப்பின் தலைவர் இத்தாகந்த சத்தாதிசே என்பவரும் தமிழ் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

#TamilSchoolmychoice

இலங்கைக்கு எதிராக தமிழ் நடிகர்கள் போராட்டம் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. அவர்களுடைய போராட்டத்தால் இங்குள்ள தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் தமிழ் படங்களை இலங்கையில் திரையிடக்கூடாது. அதற்கு பதிலாக கேரள படங்களை இலங்கையில் திரையிடலாம். இது சம்பந்தமாக தேசிய திரைப்பட கூட்டு ஸ்தாபனத்திடம் நாங்கள் கோரிக்கை விடுக்க இருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.