Home Featured இந்தியா முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீது செருப்பை வீசி தாக்கிய இலங்கைத் தமிழர்!

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீது செருப்பை வீசி தாக்கிய இலங்கைத் தமிழர்!

658
0
SHARE
Ad

MK Narayanan350சென்னை – ஆங்கில ஏடு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன்(படம்) மீது இலங்கைத் தமிழர் ஒருவர் செருப்பை வீசி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘இந்தியாவில் இலங்கை தமிழர்களின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஆங்கில ஏடு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் எம்.கே.நாராயணன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து நாராயணன் மேடையை விட்டு இறங்கி வந்த போது, மர்ம நபர் ஒருவர், நாராயணுக்கு கை கொடுப்பது போல சென்று, “இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு காரணமே நீதான்…!” என்றபடியே  காலில் இருந்த செருப்பைக் கழற்றி கழுத்து, முகம், தலை ஆகிய பகுதிகளில் நாராயணனை சரமாரியாக அடித்துள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலில் pirabagaranநாராயணனின் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

#TamilSchoolmychoice

அருகில் இருந்தவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, நாராயணனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

நாராயணன் மீது தாக்குதல் நடத்திய அந்த நபரின் பெயர் பிரபாகரன்(படம்) என்று தெரிய வந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.