கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை சுமார் 3,194 பல்கலைக்கழக மாணவர்கள் மா நிலங்களுக்குள்ளேயே அவரவர் வீடுகளுக்குத் திரும்ப இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இந்த இயக்கம் நான்கு மண்டலங்களை உள்ளடக்கியது. அதாவது கிழக்கு மண்டலத்திற்குள்ளே (பகாங், கிளந்தான் மற்றும் திரெங்கானு), பேராக் மண்டலத்திலுள்ளே, தெற்கு மண்டலத்திற்குள்ளே (நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் மலாக்கா) மற்றும் சரவாக் மண்டத்திற்குள்ளேயே மாணவர்கள் அனுப்பப்படுவார்கள்.
“ஒரு குடும்ப பிரதிநிதி மாணவர்களை காவல் துறை தலைமையகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வர வேண்டும்.”
“வருகை தரும் இடத்தில் மாணவர்களை அழைத்துச் செல்ல முடியாத குடும்பங்களுக்கு, மாணவர்களை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் அனுப்பி வைக்கும்” என்று இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.