Home One Line P2 ஆஸ்திரேலியா : 7 பேர்களைக் கத்தியால் தாக்கியவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

ஆஸ்திரேலியா : 7 பேர்களைக் கத்தியால் தாக்கியவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

600
0
SHARE
Ad

பெர்த் – மேற்கு ஆஸ்திரேலியாவில் சவுத் ஹெட்லாண்ட் என்ற இடத்திலுள்ள பேரங்காடி ஒன்றில் வெள்ளிக்கிழமை (1 மே) காலை பெரிய கத்தி ஒன்றுடன் பலரைத் தாக்கிய 30 வயதைத் தாண்டிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.

பேரங்காடியில் இருந்த 7 பேர்களைத் தாக்கிய அவன் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் தாக்கியிருக்கிறான்.

தாக்குதலை நிறுத்தி விட்டு கையில் இருக்கும் கத்தியைக் கீழே போடுமாறு காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் அந்நபர் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்ததால் அவனைச் சுட்டதாகவும் அதன் காரணமாகவும் அவன் மரணமடைந்ததாகவும் காவல் துறை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

தாக்குதல்களுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.