Home One Line P1 சாஹிட் ஹமிடி மகளுக்கு 800 ரிங்கிட் அபராதம்

சாஹிட் ஹமிடி மகளுக்கு 800 ரிங்கிட் அபராதம்

596
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியக் குற்றத்திற்காக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிடாயா அகமட் சாஹிட்டுக்கு 800 ரிங்கிர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது கணவர் சைபுல் நிஜாம் முகமட் யூசோப் மீதும் அதே குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் ஒரே நேரத்தில் படித்த குற்றச்சாட்டுகளுக்கு நூருல்ஹிடாயா மற்றும் சைபுல் நிஜாம் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிபதி  ஷா விரா அப்துல் ஹலீம் இந்த முடிவை எடுத்தார்.

#TamilSchoolmychoice

புத்ராஜெயா கீழ் நிலை  நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை (உள்ளூர் தொற்று பகுதி நடவடிக்கைகள்) 2020 சட்டத்தை மீறியதாக இந்த இணையின்  மீது குற்றம் சாட்டப்பட்டது.