கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் நேரடி பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பல ஒப்பந்தங்களை வழங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக வழக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கொவிட்19 தொற்றைக் கையாள்வதற்காக அவசரகால கொள்முதல் நடைமுறைகளை செய்வதற்கான ஒப்பந்தக்காரரின் நியமனம் செயல்முறை சம்பந்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சுகாதார அமைச்சின் சோதனைகளில் சில அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தியை அவர் மறுத்தார்.
ஊகங்கள் வேண்டாம் என்றும் ஊழல் தடுப்பு நிறுவனம் தனது விசாரணையை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் எம்ஏசிசி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
“தயவுசெய்து எம்ஏசிசி தனது வேலையைச் செய்யட்டும். விசாரணை நடந்து வருகிறது, மேலும் அனைத்து வகையான ஊகங்களும் விசாரணையைத் தடுக்கும்.”
“அதே நேரத்தில், இது அந்த அமைப்பு மற்றும் சந்தேகிக்கும் நபர்கள் மீது எதிர்மறையான தோற்றத்தை அளிக்கிறது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அவசர கொள்முதல் நடைமுறையின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு வாங்குதலுக்கும், ஒப்பந்தக்காரர்களை நியமிக்கும் பணி தொடர்பாக எம்ஏசிசி விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.