Home One Line P1 நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு குறித்து சிலாங்கூர் நிதானமான முடிவை எடுத்துள்ளது -அமிருடின் ஷாரி

நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு குறித்து சிலாங்கூர் நிதானமான முடிவை எடுத்துள்ளது -அமிருடின் ஷாரி

747
0
SHARE
Ad

ஷா அலாம்: நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்களும் நேற்று திங்கட்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கவில்லை என்று சிலாங்கூர் கூறியுள்ளது.

சிலாங்கூர் என்ன செய்கிறதென்பது மாநில எல்லைக்கு உட்பட்டது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“நான் மற்ற மாநிலங்களைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

#TamilSchoolmychoice

“சிலாங்கூர் அரசாங்கம் எடுத்த முடிவு சட்டத்தின் எல்லைக்கும் அதிகார வரம்புக்கும் உட்பட்டது என்று நான் நம்புகிறேன்.”

“மாற்றத்திற்கு உட்பட்ட முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் (சூழ்நிலைகளுக்கு ஏற்ப)” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

அனைத்துலக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி அளித்த அறிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, ​​அவர் இவ்வாறு கூறினார்.

எவ்வாறாயினும், சிலாங்கூர் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் (எம்கேஎன்) தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் துறைகளின் பல சந்திப்புக் கூட்டங்கள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், மாநில அரசின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமிருடின் கூறினார்.

“நிறுவனங்கள் அந்த நடவடிக்கையை எடுக்க முடியும். நாம் ஓர் அரசியலமைப்பு கொண்ட நாடு. சட்டங்கள் மற்றும் பல உள்ளன. ஆனால், சிலாங்கூர் அது எங்கள் அதிகார எல்லைக்குள் இருப்பதாக நினைக்கிறேன்.”

“இந்த காலகட்டத்தில் நாம் எந்த முடிவையும் எடுப்பதற்குள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.”

“ஸ்ரீ பெட்டாலிங் சம்பவங்கள் இதற்கு முன்பு இருந்ததால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் கடுமையான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.