Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

கொவிட்19: இந்தியாவில் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

592
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்கள் கிட்டத்தட்ட 50,000- ஆக உயர்ந்துள்ளன.

மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கொரொனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1,700- ஐ எட்டியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு மகாராஷ்டிராவிலும், 6,000- க்கும் அதிகமானோர் குஜராத்திலும், டில்லியில் 5,000-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் 4,000- க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

உத்தரபிரதேசத்தில் சுமார் 3,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 3,000- க்கும் மேற்பட்டவர்கள் மத்திய பிரதேசத்தில் பாதிக்கப்படுள்ளனர். ராஜஸ்தானிலும் இதே எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்குக்கு மத்தியில் இந்தியா உள்ளது. ஆனால் , தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் தாக்கத்தை நிர்வகிக்க அது போராடி வருகிறது.

சில நகரங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளை கோரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.