Home One Line P2 கொவிட்19 : சிங்கப்பூரில் 788 புதிய பாதிப்புகள்; மொத்த பாதிப்புகள் 20 ஆயிரத்தைத் தாண்டியது

கொவிட்19 : சிங்கப்பூரில் 788 புதிய பாதிப்புகள்; மொத்த பாதிப்புகள் 20 ஆயிரத்தைத் தாண்டியது

453
0
SHARE
Ad

சிங்கப்பூர்: நேற்று புதன்கிழமை (மே 6) நண்பகல் வரையில் சிங்கப்பூரில் 788 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் தொடர்ந்து புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகின்றது.

புதிய பாதிப்புகளைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

#TamilSchoolmychoice

புதிய பாதிப்புகளில் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்கள்  11 பேர்கள் மட்டுமே!

எஞ்சியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அந்நியத் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்புகளில் இருந்தவர்களாவர்.

தென்கிழக்காசியாவிலேயே அதிகமான பாதிப்புகளைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.

தொழிலாளர் குடியிருப்புகளில் தொடர்ந்து அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளின் காரணமாகவே, கொவிட்19 பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

எனினும் மரண எண்ணிக்கை 24 ஆக குறைந்த அளவிலேயே இன்னும் இருந்து வருகிறது. இந்த 24 பேர்களின் மரண எண்ணிக்கையில், 18 பேர்கள் மட்டுமே கொவிட்19 பாதிப்பால் நேரடியாக மரணமடைந்தவர்கள். எஞ்சிய 6 பேர்களுக்கு கொவிட்19 பாதிப்பு இருந்தாலும் மற்ற உடல்நலக் கோளாறுகளினால் மரணத்தைத் தழுவினர்.

1,513 பேர்கள் இதுவரையில் கொவிட்19 பாதிப்புகளில் இருந்து குணமடைந்துள்ளனர்.