Home Video நடமாட்டக் கட்டுப்பாட்டில் இல்லத்தில் இருந்தபடி இரசிகர்களோடு உரையாடும் ஹன்சிகா

நடமாட்டக் கட்டுப்பாட்டில் இல்லத்தில் இருந்தபடி இரசிகர்களோடு உரையாடும் ஹன்சிகா

821
0
SHARE
Ad

சென்னை – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் இந்தியா முழுவதும் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்தியத் திரையுலகமும் நிலைகுத்தி நிற்கின்றது.

இந்நிலையில் வெளியே செல்ல முடியாத திரைநட்சத்திரங்கள் இல்லங்களில் இருந்தபடி தங்களின் இரசிகர்களோடு சமூக ஊடகங்களின் வழி தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தனுஷூடன் “மாப்பிள்ளை” படத்தில் நடித்து நடித்துத் தமிழ் திரையுலகில் நுழைந்தார் ஹன்சிகா மோத்வானி. அதன் பிறகு பல படங்களில் நடித்து தமிழ்நாட்டு இரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.

#TamilSchoolmychoice

இடையில் சிம்புவுடன் காதல் பின்னர் பிரிவு என்ற சோகமும் தொடர்ந்தது. நிறைய சம்பாதித்தாலும், பல நற்பணிகளுக்கும், அனாதை ஆசிரமங்கள் நடத்துவதற்கும் நிதி உதவி வழங்கி வரும் நல்ல உள்ளம் ஹன்சிகா.

தற்போது மீண்டும் திரையுலகில் இன்னொரு சுற்று வர முயற்சிகளின் இறங்கியுள்ளார்.

இதற்கிடையில் வீட்டில் சும்மா ஏன் கிடக்க வேண்டும் என இரசிகர்களோடு தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

“யார், என்ன, எங்கே, ஏன், எப்போது” என ஐந்து கேள்விகளின் மூலம் தனது பதில்களுடன் உரையாடியிருக்கும் அவர் அந்த உரையாடலை யூடியூப் தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

ஹன்சிகாவின் அந்த கேள்வி-பதில் உரையாடலை கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: