Home One Line P1 வீட்டிலிருந்தே பணிப்புரிய டுவிட்டர் தம் பணியாளர்களை கேட்டுக் கொண்டது

வீட்டிலிருந்தே பணிப்புரிய டுவிட்டர் தம் பணியாளர்களை கேட்டுக் கொண்டது

692
0
SHARE
Ad

கலிபோர்னியா: தமது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

கொவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில் நிபந்தனைகளுடன் பணிப்புரிய அனுமதிக்கப்பட்ட போதும், நிறுவனம் மீண்டும் அலுவலகங்களைத் திறந்த பிறகு, அதன் பெரும்பாலான பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும் என்று அது கூறியுள்ளது.

கொரொனா தொற்று பரவும் இக்காலத்தில் வீட்டிலிருந்து பணிப்புரியும் நிலையை முதன் முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களும் அடங்கும்.

#TamilSchoolmychoice

மேலும், அவை தொழிலாளர்களை மீண்டும் வளாகத்திற்கு அழைத்து வருவதில் அவசரப்படவில்லை. பேஸ்புக் மற்றும் கூகுள் கடந்த வாரம் தங்கள் ஊழியர்களிடம் 2020 இறுதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று தெரிவித்திருந்தன.

பெரும்பாலான தொழிலாளர்கள் 2021 வரை அலுவலகத்திற்கு திரும்ப மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி செவ்வாயன்று ஒரு மின்னஞ்சலில் வீட்டிலிருந்தே பணிப்புரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதாக ப்ஸ்பீட் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.