கோலாலம்பூர்: அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகிற திங்கட்கிழமை (மே 18) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நினைவூட்டப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய ஆறு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட இந்த அமர்வு மிக முக்கியமானது என்று மக்களவை துணை சபாநாயகர் டத்தோ முகமட் ராசிட் ஹஸ்னான் தெரிவித்தார்.
சுகாதார பிரச்சனைகள் குறித்து வலுவான எழுத்துப்பூர்வ காரணம் இல்லாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.
“மாண்புமிகு உறுப்பினர்கள் கலந்துகொண்டு உத்தரவைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வலுவான காரணமின்றி நீங்கள் கலந்து கொள்ளாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினராக தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ” என்று அவர் இன்று புதன்கிழமை கூறினார்.