Home One Line P1 பண்டிகைகளின் முதல் நாளில் மட்டுமே உபசரிப்புகளை மேற்கொள்ளலாம்- இஸ்மாயில் சப்ரி

பண்டிகைகளின் முதல் நாளில் மட்டுமே உபசரிப்புகளை மேற்கொள்ளலாம்- இஸ்மாயில் சப்ரி

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கருத்தில் கொண்டு, பண்டிகைகளின் முதல் நாள் மட்டுமே, அதாவது நோன்பு பெருநாள், பெஸ்தா காமாதான் மற்றும் ஹாரி காவாய் அன்று ஒரு நாளுக்கு மட்டும் உபசரிப்புகளை மேற்கொள்ள முடியும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு செய்துள்ளது.

இந்த வருகைகளில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பேர் வரை இருக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

“இந்த அதிகபட்ச எண்ணிக்கையானது, குடியிருப்பின் அளவிற்கு உட்பட்டு கூடல் இடைவெளி நடைமுறைகளை கடைபிடிக்க முடியுமா என்பதை உறுதிசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, 600 சதுர அடி அடுக்குமாடி விட்டுக்கு, 20 பேர் ஒரே சமயத்தில் இருப்பது மிகவும் கடினம். எனவே, எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“முகக்கவசங்களை அணிவது மற்றும் வருகையின் போது சோப்புடன் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகள் குறித்த நிலையான இயக்க முறைமையை கவனியுங்கள்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மற்ற நாடுகளில் நடந்ததைப் போல கொவிட்-19 சம்பவங்கள் மீண்டும் எழுவதைத் தவிர்க்க மக்கள் இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.