Home One Line P2 மோடி அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

மோடி அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

871
0
SHARE
Ad

புதுடில்லி – நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 20 ஆயிரம் பில்லியன் ரூபாய் மதிப்புடைய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அரசாங்கம் வழங்கும் என அறிவித்தார்.

கொவிட்19 பாதிப்பால் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை சீரமைக்க இந்தத் திட்டங்கள் உதவும் எனவும் மோடி தெரிவித்தார்.

மோடி அறிவித்திருக்கும் திட்டத்தின் மதிப்பு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) 10 விழுக்காடாகும்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை (மே 13) பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (படம்)  20 ஆயிரம் பில்லியன் ரூபாய்களுக்கான விரிவான நிதிப் பங்கீடுகளை முதற் கட்டமாக அறிவித்தார். அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விரிவான விளக்கங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

சாதாரண தொழிலாளி முதல் வணிக நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் இந்த நிதி உதவிகள் வழங்கப்படும் என்ற உறுதியையும் நிர்மலா வழங்கினார்.

வரிவிதிப்புகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதச் சம்பளம் பெறாக பிரிவினருக்கான வரி விதிப்பு 25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி பாரங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களின் மூலம் 500 பில்லியன் ரூபாய் பொதுமக்களிடையே புழக்கத்திற்கு வரும் என்றும் நிர்மலா மேலும் குறிப்பிட்டார்.