ஜெனீவா: கொரொனா பாதிப்பை மொத்தமாக உலகிலிருந்து அகற்ற முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பல நாடுகள் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, உலக மக்கள் இந்த தொற்று நோயுடன் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
தொற்றுநோய் எப்போது முடிவடையும் என்று கணிப்பது கடினம் என்று உலக சுகாதார நிறுவன அவசரநிலை துறை இயக்குனர் மைக் ரியான் கூறினார்.
எப்படி எச்ஐவி இன்னும் உலகில் அச்சுறுத்தும் தொற்றாக இருப்பதால், உலக மக்கள் கொவிட்-19- ஐ அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டர்.
கொரொனா தொற்று கடந்த ஆண்டு சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இப்போது 4.2 மில்லியன் மக்களை பாதித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 300,000 பேர் இறந்துள்ளனர்.
பொருளாதாரத் தடைகளை தளர்த்துவது ஒரு புதிய நோய்த்தொற்று அலையை தூண்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற எச்சரிக்கையையும் உலக சுகாதார நிறுவனம் மீண்டும் வலியுறுத்துகிறது.
இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இந்த நச்சுயிர் விலங்குகளிலிருந்து தோன்றி பின்னர் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.