Home கலை உலகம் பாகுபலி புகழ் ராணா டகுபதி கைப்பிடிக்கப் போகும் பெண் மிஹிகா பஜாஜ்

பாகுபலி புகழ் ராணா டகுபதி கைப்பிடிக்கப் போகும் பெண் மிஹிகா பஜாஜ்

949
0
SHARE
Ad

ஹைதராபாத் – தெலுங்குப் படவுலகின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் எப்படி கதாநாயகன் பாகுபலியாக நடித்து கோடிக்கணக்கான இரசிகர்களை பிரபாஸ் பெற்றாரோ அதற்கு இணையாக கொடூர வில்லன் பல்வால் தேவனாக நடித்துப் புகழ் பெற்றவர் ராணா.

இருவருமே நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் என்றாலும் இன்னும் திருமணம் ஆகாமல் காலங்கடத்திக் கொண்டிருப்பவர்கள்.

ஊடகங்கள் எப்போதுமே பிரபாசின் திருமணத்தைப் பற்றி மட்டுமே ஆரூடம் கூறிக் கொண்டிருக்க ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டு தனது திருமணச் செய்தியை அறிவித்திருக்கிறார் ராணா.

#TamilSchoolmychoice

அவருடன் இருக்கும் பெண் மிஹிகா பஜாஜ் (படம்) என்று பெயர் குறிப்பிட்டு “அவர் எனக்கு சம்மதம் சொல்லி விட்டார்” என்று பதிவிட்டிருக்கிறார் ராணா.

மிஹிகா பஜாஜ் ஹைதராபாத் நகரில் ஓர் உள்ளரங்கு வடிவமைப்பு மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தை நடத்தி வருபவராவார்.

ராணா, மிஹிகா பஜாஜ் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருப்பவர்கள். அண்மையக் காலத்தில் இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்து தற்போது திருமணம் வரையில் வந்து முடிந்திருக்கிறது.

இந்த வருட இறுதியில் அவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.