கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,439-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுமையிலும் 1,304 பேர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 14 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 5 பேர் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments