Home One Line P1 சினி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 4-இல் நடைபெறும்

சினி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 4-இல் நடைபெறும்

440
0
SHARE
Ad

புத்ராஜெயா: சினி மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 4-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

ஜூன் 20 அன்று வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் என்றும் முன்கூட்டிய வாக்களிப்பு ஜூன் 30 நடைபெறும் என்று அதன் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார்.

மே 6- ஆம் தேதி டத்தோஸ்ரீ அபுபக்கர் ஹருண் (60), மாரடைப்பால் கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து சினி சட்டமன்றம் காலியானது.

#TamilSchoolmychoice

14- வது பொதுத் தேர்தலில், 10,027 வாக்குகளைப் பெற்ற அபுபக்கர், 5,405 வாக்குகளைப் பெற்ற பாஸ் வேட்பாளர் முகமட் பாசில் நூர் அப்துல் காரீம் மற்றும் 1,065 வாக்குகளைப் பெற்ற பிகேஆர் வேட்பாளர் முகமட் ரசாலி இத்னைன் ஆகியோரை விட 4,622 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

முன்னதாக, தேர்தல் தேதி, நியமன நாள், வாக்குப்பதிவு நாள், தேர்தல் பட்டியல் மற்றும் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பிற ஏற்பாடுகள் போன்ற வாக்கெடுப்பின் முக்கியமான தேதிகள் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.