புது டில்லி: புலம்பெயர்ந்தோருக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச உணவு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
கொவிட்19 காரணமாக செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகளின் விளைவுகளை நிவர்த்தி செய்வதாக அறிவிக்கப்பட்ட, 266 பில்லியன் அமெரிக்க டாலர் (1.15 டிரில்லியன் ரிங்கிட்) பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
463 மில்லியன் அமெரிக்க டாலர் (2.01 பில்லியன் ரிங்கிட்) இலவச உணவு வழங்கல், 80 மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“புலம்பெயர்ந்தோர் இப்போது வெளியேறி வருவதை நாங்கள் அறிவோம், அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.
“நாங்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் தங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இலவச உணவை வழங்குவோம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக நகரத்தை விட்டு வெளியேறினர்.
அவர்களில் சிலர் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதால் பட்டினி கிடப்பார்கள் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை அரசு கண்டுக்கொள்ளாததால் பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.