Home One Line P1 நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்ற மொகிதினின் அறிவுறுத்தலை நினைவுக்கூர்ந்த சைட் சாதிக்

நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்ற மொகிதினின் அறிவுறுத்தலை நினைவுக்கூர்ந்த சைட் சாதிக்

593
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியில் இப்போது குழப்பங்கள் இருந்தாலும், சைட் சாடிக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேற்று முகநூலில் பகிரப்பட்ட மொகிதினின் 73-வது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், பிரதமர் அவருக்கு அளித்த ஆலோசனையை நினைவூட்டினார்.

“ஜோகூரில் சிறந்த ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதற்காக நான் அரசியலை விட்டு வெளியேறவிருந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. மேலும், எனது முதுநிலை படிப்புக்காக ஆக்ஸ்போர்டுக்கு செல்லவும் எண்ணம் இருந்தது.”

#TamilSchoolmychoice

“நீங்கள் (மொகிதின்) என்னை அழைத்து, நமக்கு நாம் உண்மையாக இருக்குமாறு அறிவுறுத்தினீர்கள். நாம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை (இந்த கட்சியின் போராட்டத்தில்) ஒன்றாக இருப்போம்.”

“உங்கள் வார்த்தைகள் ஒரு தந்தையைப் போல எனக்கு உறுதியளிக்கின்றன” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அரசியலை தமது தொழிலாக தேர்வு செய்ததற்கும், கடந்த காலங்களில் மொகிதினை ஆதரித்ததற்கும் தாம் வருத்தப்படவில்லை என்று சைட் கூறினார்.

“நான் வருந்துகிறேனா? இல்லவே இல்லை.

“நீங்கள் மலேசியாவுக்குத் தேவையான தலைவர் என்பதை நான் அறிவேன். ”

“நாம் இன்று வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், உங்கள் மீதான எனது மரியாதை ஒருபோதும் அழியாது” என்று அவர் கூறினார்.