Home One Line P2 இஸ்ரேலுக்கான சீனாவின் தூதர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்

இஸ்ரேலுக்கான சீனாவின் தூதர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்

816
0
SHARE
Ad
டூ வெய் (கோப்புப் படம்) – படம் நன்றி : ஹாங்காங் பிரீ பிரெஸ்

ஜெருசலம் – இஸ்ரேலுக்கான சீன நாட்டின் தூதர் 58 வயதானடூ வெய் (Du Wei) டெல் அவிவ் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இஸ்ரேலிய காவல் துறையினர் இந்த மரணம் தொடர்பான விசாரணைகளைத் தீவிரமாகக் கையாண்டு வருகின்றனர். மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் முதல் கட்ட ஆய்வுகளின்படி அவர் தூக்கத்தில், இயற்கையான முறையில் மரணம் எய்தினார் என்பது தெரிய வருவதாக சில ஊடகங்கள் தெரிவிக்கன.

#TamilSchoolmychoice

டூ வெய் இதற்கு முன்னர் உக்ரேன் நாட்டின் தூதராகப் பணியாற்றினார். கொவிட்19 காலகட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.

அவருக்கு ஒரு மனைவியும் மகனும் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் தற்போது இஸ்ரேலில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேலுக்கும், சீனாவுக்கும் இடையில் சிறந்த முறையில் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன.