கோலாலம்பூர் – வரலாற்றுபூர்வ நாடாளுமன்றக் கூட்டம் இன்று தொடங்கவிருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலை 9.00 மணி முதல் வந்து சேரத் தொடங்கினர்.
முன்னாள் பிரதமர்கள் நஜிப் துன் ரசாக், துன் மகாதீர் ஆகியோர் நாடாளுமன்ற வளாகம் வந்தடைந்தனர்.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கும் இன்றைய நாடாளுமன்றக் கூட்ட நடப்புகளை நாடு முழுமையிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அதிகாரத்துவ ஊடகங்களே நாடாளுமன்ற நடப்புகளைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நாடாளுமன்ற வாயில்களில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பத்திரிகையாளர்கள் குழுமியுள்ளனர். அண்மைய ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் நாடாளுமன்ற நடப்புகள் குறித்து செய்திகள் படைக்க அனுமதிக்கப்படாதது இதுவே முதன் முறையாகும்.
பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்றும் எல்லைக் கோடுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.