Home One Line P2 கொவிட்19: உலகளவில் 4.7 மில்லியன் மக்கள் பாதிப்பு

கொவிட்19: உலகளவில் 4.7 மில்லியன் மக்கள் பாதிப்பு

465
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்19- இன் மொத்த நேர்மறையான சம்பவங்களின் எண்ணிக்கை, உலகளவில் இப்போது 4.7 மில்லியனைத் தாண்டியுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி உலகளவில் 100,000 கொவிட்19 நேர்மறை சம்பவங்கள் அதிகரித்ததைக் காட்டுகிறது.

ஆறு நாடுகள் 200,000- க்கும் மேற்பட்ட நேர்மறையான சம்பவங்களை கொண்டுள்ளன. அமெரிக்கா ஒரு மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

200,000-க்கும் அதிகமான நேர்மறையான சம்பவங்களைக் கொண்ட மற்ற ஐந்து நாடுகள் இரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் இத்தாலி.

இதற்கிடையில், பிரேசிலில் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தினசரி நேர்மறையான சம்பவங்கள் 13,000- ஐ தாண்டி 235,000 சம்பவங்களாகப் பதிவாகின.

நான்கு நாடுகளில், அதாவது பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் 100,000 நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன.

இதற்கிடையில், இந்தியா மற்றும் பெருவில் சீனாவுக்கு அப்பால் முறையே 95,000 மற்றும் 92,000 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.