Home One Line P1 கெடா மாநில மந்திரி பெசாராக முகமட் சனுசி பணியைத் தொடங்கினார்

கெடா மாநில மந்திரி பெசாராக முகமட் சனுசி பணியைத் தொடங்கினார்

600
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: புதிய கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தனது முதல் நாள் பணியை விஸ்மா டாருல் அமானில் இன்று தொடங்கினார்.

46 வயதான முகமட் சனுசியின் வருகையை அவரது அந்தரங்கச் செயலாளர் டத்தோ அர்மிஷா சிராஜ் காலை 8.43 மணிக்கு வரவேற்றார்.

பின்னர் அவர் வேலையைத் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு முதல்வர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்தார்.

#TamilSchoolmychoice

சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷா தனது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து மாநில சட்டமன்ற உறுப்பினரான அவர் நேற்று புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.

முன்னதாக, டத்தோஸ்ரீ முக்ரிஸ் துன் டாக்டர் மகாதீர் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மையை இழந்த பின்னர் உடனடியாக பதவியை விட்டு விலகினார்.