Home One Line P1 அரசாங்கத்தை கேள்வி கேட்கக் கூடாதென்றால் நாடாளுமன்றம் தேவையில்லை- மகாதீர்

அரசாங்கத்தை கேள்வி கேட்கக் கூடாதென்றால் நாடாளுமன்றம் தேவையில்லை- மகாதீர்

641
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சி தொடர்ந்து அரசாங்கத்தை கண்டிக்கும் என்றும், மாமன்னர் சுல்தான் அப்துல்லா அளித்த அறிவுரைக்கு இது முரணானது அல்ல என்றும் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பெர்சாத்து தலைவரான அவர் கூறுகையில், எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் குறைகளை ஒருபோதும் கண்டிக்க கூடாது என்று மாமன்னர் கூறவில்லை என்று கூறினார்.

“மாமன்னர் நாட்டிலுள்ள பிரச்சனைகளை ஒருபோதும் பேசக்கூடாது என்று கூறவில்லை என்று நான் நினைக்கிறேன். நம்மால் பேச முடியாது என்றால், நாம் நாடாளுமன்றத்தை நிறுத்தி விடுவோம் ” என்று மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசியாவை அரசியல் நெருக்கடிக்கு இழுக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறிய சுல்தான் அப்துல்லாவின் கருத்துகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

“நாடாளுமன்ற அமர்வு தேவையில்லை என்று மாமன்னர் கூறவில்லை, எதிர்க்கட்சி, அரசாங்கம் தவறு செய்தால் கேட்கும்.

“நாங்கள் பிறரை மோசமான பெயர்களால் அழைக்கவில்லை. ஆனால், மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பது அரசாங்கத்திற்குள் அல்லது வெளியே இருந்தாலும், அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். ” என்று அவர் கூறினார்.