Home One Line P1 சாஹிட் ஹமிடி வழக்கு விசாரணைகள் ஜூன் 15 தொடங்கி 30 நாட்களுக்கு நடக்கும்

சாஹிட் ஹமிடி வழக்கு விசாரணைகள் ஜூன் 15 தொடங்கி 30 நாட்களுக்கு நடக்கும்

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு மாத ஒத்திவைப்பிற்குப் பிறகு, முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியின் ஊழல், நம்பிக்கை மீறல் மற்றும் அகால்பூடி அறக்கட்டளை நிதி சம்பந்தப்பட்ட பண மோசடி குற்றச்சாட்டுகளின் மீதான வழக்கு வருகிற ஜூன் 15- ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

அம்னோ தலைவருமான அவரது விசாரணை மார்ச் 6-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன் நடைபெற்றது.

இருப்பினும், கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அமல்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

நீதிபதிகள் ஜூன் 15 முதல் 30 நாட்களை நிர்ணயித்துள்ளனர். ஜூலை 2, 3, 13, மற்றும் 14; ஜூலை 27 முதல் 30 வரை; ஆகஸ்ட் 10 முதல் 14 வரை; ஆகஸ்ட் 24 முதல் 28 வரை மற்றும் செப்டம்பர் 21 முதல் 30 வரை இந்த வழக்கு விசாரணைகள் நடக்கும்.

சாட்சியமளிக்க அரசு தரப்பு இதுவரை 43 சாட்சிகளை அழைத்துள்ளது.