Home One Line P2 கொவிட்19: அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 90,000 பேரைத் தாண்டியது

கொவிட்19: அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 90,000 பேரைத் தாண்டியது

516
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் 90,000 இறப்புகளும் , 1.5 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களும் திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் தொற்றுநோய்கள் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளன.

ஆனால், பெல்ஜியம், ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி மற்றும் சுவீடன் உட்பட பல நாடுகள் தனிநபர் எண்ணிக்கையில் அதிக ஆபத்தான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன என்று புள்ளிவிவர வலைத்தளமான வேர்லோமீட்டர் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூற்றுப்படி, அமெரிக்காவின் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நியூயார்க் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அங்கு 28,300- க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 11.5 மில்லியன் பரிசோதனைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் தோன்றியதிலிருந்து இந்த தொற்றுநோய் உலகெங்கிலும் 316,000- க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.