இந்திப் படங்களில் கொழு கொழு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. வளர்ந்ததும் அதே போன்ற கொழு, கொழுவென்ற இளமையான தோற்றத்துடன் “மாப்பிள்ளை” படத்தில் தனுஷூக்கு இணையாகத் தோன்றினார் ஹன்சிகா.
அழகான தோற்றத்துடன் இன்னொரு பாலிவுட் வரவாகத் தமிழ் இரசிகர்களால் கொண்டாடப்பட்டார் ஹன்சிகா.
இடையில் பட வாய்ப்புகள் அவருக்குக் குறைந்தாலும் சமூக ஊடகங்களிலும், டுவிட்டர் போன்ற தளங்களிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி இரசிகர்களோடு தொடர்பில் இருந்தார் ஹன்சிகா.
அவரது டுவிட்டர் தளத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.7 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இருந்தாலும், தொடர்ந்து தனது புகைப்படங்களை – அதிலும் தனது கவர்ச்சியானத் தோற்றங்களை – அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் ஹன்சிகா.
அண்மையில் கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடு முடக்கத்தால் தனது வீட்டில் இருந்தபடி சமோசா பலகாரங்கள் செய்ததை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார் ஹன்சிகா.
அவரது இன்ஸ்டாகிராம், சமூக ஊடகங்களில் வெளியான படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: