Home One Line P2 அம்பான் புயல்: மேற்கு வங்காளத்தில் 12 பேர் மரணம்

அம்பான் புயல்: மேற்கு வங்காளத்தில் 12 பேர் மரணம்

740
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அம்பான் புயல் 12 பேரைக் கொன்றதுடன், இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் புதன்கிழமை அழிவின் பாதையை விட்டுச் சென்றது.

இந்த புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேச கடற்கரைகளை ஒரு மணி நேரத்திற்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“ஒவ்வொரு பகுதியாக அழிக்கப்பட்டன. இன்று நான் ஒரு போர் போன்ற சூழ்நிலையை அனுபவித்திருக்கிறேன். குறைந்தது 10-12 பேர் இறந்துவிட்டனர்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதை உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

#TamilSchoolmychoice

நந்திகிராம், ராம்நகர் மாவட்டங்கள் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மாநில தலைநகரான கொல்கத்தாவில் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

புயலின் சீற்றத்தால் வீடுகள், மிகம்பங்கம் அழிந்து முறுக்கியது, மற்றும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வங்காளதேசத்தில் குறைந்தது ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.