Home One Line P1 அம்பாங்கிலிருந்து கிளந்தான் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கொவிட்19 தொற்று

அம்பாங்கிலிருந்து கிளந்தான் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கொவிட்19 தொற்று

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19- க்கு நேர்மறையாக பரிசோதனை செய்யப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண், அம்பாங்கிலிருந்து கிளந்தானுக்குப் பயணம் செய்துள்ளார். தமது சொந்த மாநிலத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அங்கு சென்றுள்ளார்.

35 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் அந்த பெண், கிளந்தானில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றபோது இந்த தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டார்.

“கிளந்தான் கொவிட்19 தொற்று இல்லாத பச்சை மண்டலம். சிவப்பு மண்டலமான அம்பாங்கிலிருந்து அந்தப் பெண் மீண்டும் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அவர் தனது கிராமத்திற்கு வந்ததும், ஒரு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவர் தொற்றுக்கு சாதகமாக பரிசோதிக்கபட்டார்.” என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“அவருக்கு தொற்று எங்கிருந்து வந்தது என்று நாங்கள் கண்டறிதலை நடத்தியுள்ளோம், மேலும் பெண்ணின் நெருங்கிய தொடர்புகளை கண்டுபிடித்து வருகிறோம்.” என்று அவர் கூறினார்.