வாஷிங்டன் – கொவிட்19 காரணமாக 92,000 மரணங்களைப் பதிவு செய்து அமெரிக்கா இறப்பு எண்ணிக்கையில் முதல் நாடாக உள்ளது.
உலகளவில் கொவிட்19 காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் 3,000 சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதன் மூலமாக இறப்பு எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 325,000- ஐ விட அதிகமாக உள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி, மூன்று நாடுகள் இப்போது 30,000 இறப்புகளைத் தாண்டிவிட்டன.
பிரிட்டன் மற்றும் இத்தாலி முறையே 35,000 மற்றும் 32,000 இறப்புகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
நான்காவது மற்றும் ஐந்தாவது நாடுகளில் (பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின்), முறையே 28,000 மற்றும் 27,000 இறப்புகள் உள்ளன.