Home One Line P1 அரசின் எச்சரிக்கையை மீறி 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநில எல்லையைத் தாண்ட முயற்சி

அரசின் எச்சரிக்கையை மீறி 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநில எல்லையைத் தாண்ட முயற்சி

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதிலும் நேற்று புதன்கிழமை மொத்தம் 2,412 வாகனங்கள் மாநிலங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொள்ள முயற்சித்துள்ளன.

அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தொஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நேற்று மட்டும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறிய குற்றத்திற்காக 130 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களில் 62 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice