Home One Line P1 மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் ஆண்டு விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்தான நெகாரா தெரிவித்துள்ளது.

கொவிட்19 பாதிப்பு இன்னும் இருக்கும் நிலையில், வரும் ஜூன் 9 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால்,  மாமன்னர் சுல்தான் அப்துல்லா, இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒத்திவைக்குமாறு உத்ற்றவிட்டதாக அரண்மனை மேலாளர் டத்தோ பாசில் அகமட் ஷாம்சுடின் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

ஜூன் 3 முதல் 11 வரை திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பொது பாதுகாப்பு மற்றும் சுகாதார காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

“அனைத்து நிகழ்ச்சிகளும் பின்னர் அறிவிக்கப்படும் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.” என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஜூன் 8 பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.