Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

610
0
SHARE
Ad

புது டில்லி: கொவிட்19 காரணமாக 148 புதிய இறப்புகளும், 6,088 புதிய நேர்மறையான சம்பவங்களும் வியாழக்கிழமை நாட்டில் பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறப்புகளின் எண்ணிக்கை 3,583- ஆகவும், மொத்த சம்பவங்கள் 118,447- ஆகவும் உள்ளன.

நாட்டில் பதிவான சம்பவ எண்ணிக்கையில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

48,534 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், தற்போது நாட்டில் செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை 66,330- ஆக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 25 அன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, கடந்த வாரம் மீண்டும் மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.